Monday, 17 October 2011

நட்சத்திர ஜோடி பிரபுதேவா-நயன்தாரா

வில்லு படம் வெளியானதில் இருந்து தமிழ் சினிமாவின் கிசுகிசு பட்டியலில் இணைத்துக்கொண்ட ஜோடி தான் நம்ம பிரபுதேவா-நயன்தாரா.
அது வெறும் கிசுகிசு அல்ல நிஜம் என நயன்தாரா தன் கையில் "பிரபு" என பச்சை குத்திகொண்டதும், இருவரும் வெளிப்படையாக ஊடகங்களில் அளித்த பேட்டியும் நிரூபித்ததை யாவரும் அறிந்ததே.


அது மட்டும் அன்றி, அதை தொடர்ந்த ரம்லத்தின்(பிரபுதேவாவின் முதல் மனைவி) எதிர்ப்பு , ரம்லத்-பிரபுதேவா விவாகரத்து என, நம்ம நட்சத்திர ஜோடி பற்றிய விவகாரம் தமிழ் ஊடகங்களில் சூடு பிடிக்க ஆரம்பிக்க, ரசிகர்கள் மத்தியில் 'அடுத்தது என்ன' என பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய விடயமானது. தொடர்ந்து நயன்தாரா ஹிந்து மதத்தை தளுவுவாரா? அல்ல பிரபுதேவா கிறிஸ்தவ மதத்தை தளுவுவாரா? என ஊடகங்கள் அலசி ஆராயவும் தவறவில்லை, முடிவாக, நயன்தாரா ஹிந்து மதத்தை தழுவிக்கொண்டார். இதற்கு இடையில், ஊடகங்கள் தமக்கான பாணியில், முன்னர் ரம்லத், பிரபுதேவாவுக்காக ஹிந்துவாக மாறினார், இம்முறை பிரபுதேவா மதம் மாறுவதில் தப்பில்லையே என சுட்டி நிற்க தவறவில்லை.

இது இப்படி இருக்க, பிரபுதேவா-நயன்தாரா திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது, நயன்தாராவுக்கு திருமணப்புடவை பல்லாயிரக்கணக்கான விலை மதிப்பில் தயாராவதாகவும் செய்திகள் கசிந்தன.

இந்த காதல் விளைவாக நயன்தாரா தன் சினிமா வாழ்வுக்கு முற்றுபுள்ளி வைத்ததாகவும், "ஸ்ரீ ராம ராஜ்யம்" எனும் தெலுங்கு திரைப்படம் அவரது இறுதி படமாகும் எனவும் செய்திகள் வெளிவந்தன, அந்த படத்தில், நயன்தாரா சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதை எதிர்த்து பல பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியதும் யாவரும் அறிந்ததே. அந்த படப்பிடிப்பின் இறுதி நாளில், அனைவருக்கும் பரிசு அளித்து கண்ணீர் மல்க நயதாரா விடைபெற்றதை சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்க தவறவில்லை. எது எப்படி இருப்பினும், ஊடகைங்களின் கேள்விகளுக்கு, நயன்தாரா தான் என்னும் நல்ல படங்களில் நடிக்க தாயராக இருப்பதாக சொல்லி நழுவி கொள்ளுவது வழக்கமானது.

இது இப்படி இருக்க, சில தினக்களுக்கு முன்னர், நயன்தாரா பிரபுதேவா "காதல் முறிவு" என ஊடகங்கள் முணுமுணுக்க தொடக்கின, தெலுங்கு தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு மணிநேர நிகழ்ச்சி ஒன்றில் இந்த விவகாரம் அலசி ஆராயப்பட்டதாம். மேலும் இந்த செய்திகள் கீழ்வருமாறு தெரிவித்தன :

"பிரபுதேவாவுக்கு மகன்கள் மேல் அதிக பிரியம். வெளியூர் படபிடிப்பில் இருக்கும் போதெல்லாம் தினமும் தொலைபேசியில் குழந்தைகளுடன் பேசுவார். நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு ரம்லத்தை பிரிந்து தங்கிய போதும் குழந்தைகளை வரவழைத்து அவர்களுடனேயே அதிகநேரம் செலவிட்டார். விவாகரத்துக்கு பிறகும் அந்த பழக்கம் தொடர்கிறது. சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறார். இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க தடை போட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்துள்ளார். சமீபத்தில் கேரளா சென்ற அவர் நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாராவுக்கு தெரிய ஆத்திரமானார். இதையடுத்து காதல் முறிந்து திருமணம் நின்றுபோனது. நயன்தாரா கோபத்தில் இருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க கதை கேட்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."

இந்த செய்திகளை தொடர்ந்து, நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் "எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை இருவரும் சந்தோஷமாகதான் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். மேலும் "இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பது உண்மை. திருமணத் திகதியை விரைவில் அறிவிப்போம்" என்றும் தெரிவுத்துள்ளார்.

என்ன தான் இருந்தாலும், ' அய்யா', 'சந்திரமுகி' மூலம் தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் நுழைத்து "வல்லவன் ", "பில்லா", "யாரடி நீ மோகினி" மூலம் தான் நல்ல நடிகை என்பதை நிருபித்து 'வில்லு', 'ஆதவன்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மூலம் முதல் தர நாயகியாக இருந்து, காதல் அலையால், தன் தொழில் வாழ்கையில் மைல்கல்லை தொடாமல் இருப்பது ஒரு விதத்தில் 'தோல்வி' என்று தான் சொல்லவேண்டும்.

இந்த விவகாரம் எங்கு போய் முடியப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்போம்....!!!


குறிப்பு: இந்த நட்சத்திர ஜோடி, "பிரபு-குஷ்பூ", "அசாருதீன்- சங்கீதா பிஜ்லானி" ஆகியோரை நினைவுபடுத்துவது தெளிவு.

1 comment:

கார்த்தி கேயனி said...

பிரபுதேவா நயன்தாரா காதல் விவகாரத்தை முழுவதுமாக சொல்லுகிறது உங்கள் பதிவு.