Thursday, 20 October 2011

என்னில் நீ - கவி கிறுக்கல்

"அடி  என்னவளே, உன்னை நான் என்,
புருவங்களுகிடையில்,
கண்ணின் கரு மணிக்குளே,
திமிரிடும் மூச்சுக்குளே,
விரிந்த உதட்டிலே,
தொண்டை குரல்வளையிலே,
நெஞ்சின் குட்டி கைபிடி இருதயத்திலே,
நிதம் சுமந்து
சுகத்தில் திளைக்கிறேன்....!!!!"

- இப்படிக்கு,
காதல் கிறுக்கன்
 

தமிழ் பாடல் - அம்மா வந்தாச்சு - நந்தினி நந்தினி ஒ நந்தினி

Movie: Amma Vandhaachu (1992)
Language: Tamil
Actors: Bhagyaraj, Kushboo
Music Director: Deva
Singers: Mano, SwarnalathaWednesday, 19 October 2011

மாதவன், ஆர்யாவின் வேட்டை

Madhavan and Arya together for the first time..
Direction : Linguswamy
Music : Yuvan Shankar Raja

லிங்குசாமியின் இயக்கத்தில் மாதவன், ஆர்யா, அமலாபால், சமீராரெட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் தான் வேட்டை. இப்படத்தில், பெண்களின் கனவு நாயகர்கள் இருவர் இணைந்து நடிப்பது என்பது, பெண் ரசிகர்களுக்கு ஒரே குசி தான், தெளிவாக சொல்லுவது என்றால், முன்னாள் கனவு நாயகன் மாதவன், இந்நாள் கனவு நாயகன் ஆர்யா என்று தான் சொல்ல வேண்டும்.


ஏனெனில் மாதவன் நாற்பதை தொட்ட நடிகர், (அதுதாங்க வயசு) - ஆனாலும் இன்னும் பெண்களை கவரும் புன்னகை, ஆர்யா முப்பதை தொட்ட நடிகர் - அவரின் கண்களே பெண்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இருவரும் அண்ணன்-தம்பியாக படத்தில் வலம் வர, அக்கா-தங்கையாக வலம் வரும் சமீராரெட்டி, அமலாபால் இவர்களுக்கு சோடி. அதைவிட மாதவன் முதல் முதலாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் - வயசுக்கு ஏற்ற பாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் ஒரு நகைசுவை நிறைந்த படமாக இருக்கும் என தகவல்கள் கசிகின்றன, மற்றும் சமீராரெட்டி பிரிட்டிஷ் பெண்ணாக நடிக்கிறார். இப்பட பிடிப்பில் சமீரா ரெட்டி முதல் முறையாக பயிற்சி இன்றி துவிச்சகரவண்டி செல்லுதும் போது விழுந்து சிறு காயங்களுக்கு உள்ளானதாகா தகவல்கள் வெளியாகின. மற்றும் இந்த படம்   ஆர்யாவுக்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும் எனவும்  கருத்துகள் நிலவுகின்றன

வெளியாவதற்கு முன்பே பேசப்படும் படமாக இருந்தாலும்..... வெளியான பின்பு தான் முழுமையான விமர்சனகளை எதிர் பார்க்கமுடியும்.

ஆனால் இந்த படம் உச்ச வேகத்தில் சந்தைபடுத்த படுவதாகவும், டிசம்பர் 23 வெளியிட இருபதாகவும் சினி வட்டாரங்கள் தெருவிகின்றன....

பொறுத்திருந்து பார்போம், ஆர்யா-மாதவன் கூட்டணி எப்படி என்று?Vettai Official Trailer HD

நயன்தாரா ரசிகர்களுக்கு குஷி

மீண்டும் நயன்தாரா சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கிசுகிசுக்கள் பரவ  ஆரம்பித்துள்ளன."பிரபுதேவாவுடன் ஒற்றுமையாக இருப்பதாக அவர் தெ‌ரிவித்துள்ளார். நயன்தாரா இப்படி கூறினாலும், குழந்தைகளுடன் உள்ள உறவை முறித்தால் மட்டுமே பிரபுதேவாவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருப்பதாக நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் தெ‌ரிவிக்கிறார்கள். நயன்தாரா இன்னும் பல சுவாரஸியமான செய்திகளை‌த் தருவார் என கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன."மீண்டும் நயன்தாரா வருவாரா?

Tuesday, 18 October 2011

கல்கி திரைப்படப்பாடல் - எழுதுகிறேன் ஒரு கடிதம்

இப்பாடலில் என்னை கவர்த்த வரிகள்

"பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான் வாழ்வது,
வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் வேதம் ஓது
பெறாத வெற்றி இல்லை என்று நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டும், உரிமைக்கு போராட வேண்டுமே..."


Monday, 17 October 2011

நட்சத்திர ஜோடி பிரபுதேவா-நயன்தாரா

வில்லு படம் வெளியானதில் இருந்து தமிழ் சினிமாவின் கிசுகிசு பட்டியலில் இணைத்துக்கொண்ட ஜோடி தான் நம்ம பிரபுதேவா-நயன்தாரா.
அது வெறும் கிசுகிசு அல்ல நிஜம் என நயன்தாரா தன் கையில் "பிரபு" என பச்சை குத்திகொண்டதும், இருவரும் வெளிப்படையாக ஊடகங்களில் அளித்த பேட்டியும் நிரூபித்ததை யாவரும் அறிந்ததே.


அது மட்டும் அன்றி, அதை தொடர்ந்த ரம்லத்தின்(பிரபுதேவாவின் முதல் மனைவி) எதிர்ப்பு , ரம்லத்-பிரபுதேவா விவாகரத்து என, நம்ம நட்சத்திர ஜோடி பற்றிய விவகாரம் தமிழ் ஊடகங்களில் சூடு பிடிக்க ஆரம்பிக்க, ரசிகர்கள் மத்தியில் 'அடுத்தது என்ன' என பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய விடயமானது. தொடர்ந்து நயன்தாரா ஹிந்து மதத்தை தளுவுவாரா? அல்ல பிரபுதேவா கிறிஸ்தவ மதத்தை தளுவுவாரா? என ஊடகங்கள் அலசி ஆராயவும் தவறவில்லை, முடிவாக, நயன்தாரா ஹிந்து மதத்தை தழுவிக்கொண்டார். இதற்கு இடையில், ஊடகங்கள் தமக்கான பாணியில், முன்னர் ரம்லத், பிரபுதேவாவுக்காக ஹிந்துவாக மாறினார், இம்முறை பிரபுதேவா மதம் மாறுவதில் தப்பில்லையே என சுட்டி நிற்க தவறவில்லை.

இது இப்படி இருக்க, பிரபுதேவா-நயன்தாரா திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது, நயன்தாராவுக்கு திருமணப்புடவை பல்லாயிரக்கணக்கான விலை மதிப்பில் தயாராவதாகவும் செய்திகள் கசிந்தன.

இந்த காதல் விளைவாக நயன்தாரா தன் சினிமா வாழ்வுக்கு முற்றுபுள்ளி வைத்ததாகவும், "ஸ்ரீ ராம ராஜ்யம்" எனும் தெலுங்கு திரைப்படம் அவரது இறுதி படமாகும் எனவும் செய்திகள் வெளிவந்தன, அந்த படத்தில், நயன்தாரா சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதை எதிர்த்து பல பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியதும் யாவரும் அறிந்ததே. அந்த படப்பிடிப்பின் இறுதி நாளில், அனைவருக்கும் பரிசு அளித்து கண்ணீர் மல்க நயதாரா விடைபெற்றதை சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்க தவறவில்லை. எது எப்படி இருப்பினும், ஊடகைங்களின் கேள்விகளுக்கு, நயன்தாரா தான் என்னும் நல்ல படங்களில் நடிக்க தாயராக இருப்பதாக சொல்லி நழுவி கொள்ளுவது வழக்கமானது.

இது இப்படி இருக்க, சில தினக்களுக்கு முன்னர், நயன்தாரா பிரபுதேவா "காதல் முறிவு" என ஊடகங்கள் முணுமுணுக்க தொடக்கின, தெலுங்கு தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு மணிநேர நிகழ்ச்சி ஒன்றில் இந்த விவகாரம் அலசி ஆராயப்பட்டதாம். மேலும் இந்த செய்திகள் கீழ்வருமாறு தெரிவித்தன :

"பிரபுதேவாவுக்கு மகன்கள் மேல் அதிக பிரியம். வெளியூர் படபிடிப்பில் இருக்கும் போதெல்லாம் தினமும் தொலைபேசியில் குழந்தைகளுடன் பேசுவார். நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு ரம்லத்தை பிரிந்து தங்கிய போதும் குழந்தைகளை வரவழைத்து அவர்களுடனேயே அதிகநேரம் செலவிட்டார். விவாகரத்துக்கு பிறகும் அந்த பழக்கம் தொடர்கிறது. சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறார். இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க தடை போட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்துள்ளார். சமீபத்தில் கேரளா சென்ற அவர் நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாராவுக்கு தெரிய ஆத்திரமானார். இதையடுத்து காதல் முறிந்து திருமணம் நின்றுபோனது. நயன்தாரா கோபத்தில் இருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க கதை கேட்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."

இந்த செய்திகளை தொடர்ந்து, நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் "எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை இருவரும் சந்தோஷமாகதான் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். மேலும் "இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பது உண்மை. திருமணத் திகதியை விரைவில் அறிவிப்போம்" என்றும் தெரிவுத்துள்ளார்.

என்ன தான் இருந்தாலும், ' அய்யா', 'சந்திரமுகி' மூலம் தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் நுழைத்து "வல்லவன் ", "பில்லா", "யாரடி நீ மோகினி" மூலம் தான் நல்ல நடிகை என்பதை நிருபித்து 'வில்லு', 'ஆதவன்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மூலம் முதல் தர நாயகியாக இருந்து, காதல் அலையால், தன் தொழில் வாழ்கையில் மைல்கல்லை தொடாமல் இருப்பது ஒரு விதத்தில் 'தோல்வி' என்று தான் சொல்லவேண்டும்.

இந்த விவகாரம் எங்கு போய் முடியப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்போம்....!!!


குறிப்பு: இந்த நட்சத்திர ஜோடி, "பிரபு-குஷ்பூ", "அசாருதீன்- சங்கீதா பிஜ்லானி" ஆகியோரை நினைவுபடுத்துவது தெளிவு.

படித்ததில் பிடித்தது (கவித்துளிகள்)

"வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்"

"அசுரன் பாதி தேவன் மீதி அவனே மனிதன்
ஆக்ரோஷம் பாதி அமைதி மீதி அது வாழ்கை
சுயரூபம் பாதி விஸ்வரூபம் மீதி அது மனித வாழ்கை"

Monday, 10 October 2011

கவி கிறுக்கல்கள்

அன்று,
"அன்றொருநாள் தொலைத்த வைரக்கல்,
வானத்தில் நட்சத்திரமாய் மின்னிட,
ஊரறியா ஊமை உண்மைகள் முகவுரைக்குள் முடிவுரை எழுதிட,
விதியின் அஞ்சலுக்கு, சோகம் முகவரி எழுதிட,
இப்படிக்கு,
திசையறியா பாதசாரி"

இன்று,
"கமா ஒன்று முற்றுபுள்ளியாகும் போது, ஆச்சரியக்குறி ஒன்று எட்டிப்பார்கின்றது !
- இப்படிக்கு,
திசையறிந்த வழிப்போக்கன்,"

அதாவது, காலங்கள் மாற கோலங்களோடு காட்சிகளும் கட்சிகளும் மாறுதல் அவசியமன்றோ...!!!